OOSAI RADIO

Post

Share this post

நான்தான் கிங், பாபருக்கு ஹெட்மாஸ்டர்ன்னு நிரூபித்த கோலி

நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 14,000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. இந்த ரன்களை அடிப்பதற்கு சச்சின் 350 போட்டிகள் எடுத்துக் கொண்டார் ஆனால் விராட் கோலி வெறும் 287 போட்டிகளில் தகர்த்தெறிந்தார்.


சாம்பியன்ஸ் கோப்பையில் அதிக முறை 50 ரன்களை தாண்டிய வீரர், ஷிகர் தவான், கங்குலி, டிராவிட் சாதனைகளை, முறியடித்தார். ஐசிசி நடத்தும் முக்கியமான போட்டிகளில் அதிக 50 ரன்கள் குவித்த வீரர்களில் கோலிக்கு தான் முதலிடம்.
விளையாடிய மொத்த போட்டிகளிலும் சேர்த்து 27,503 ரன்கள் குவித்துள்ளார். முதலாவதாக சச்சின் தான் 34,357 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார் விராட் கோலி. பாகிஸ்தானுக்கு எதிராக சாம்பியன்ஸ் கோப்பையில் அதிக ரன்கள், ஏற்கனவே இந்தத் தொடரிலும் 224 என்ற அதிகபட்ச ஸ்கோர் இவரிடம் தான் உள்ளது.


சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும், ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியிலும் இதே அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவர் என்ற ரெக்கார்டையும் பதிவு செய்துள்ளார், 156 கேட்சிகள் பிடித்த ஆசாரிதீனை ஓரங்கட்டி157 வது கேட்சை பதிவு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக அதிக முறை மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டு இவரிடம் உள்ளது.
இப்படி பத்துக்கும் மேற்பட்ட சாதனைகளை நேற்று அவர் பதிவு செய்திருந்தார். விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என அந்த நாட்டு கிரிக்கெட் போர்டு எப்பொழுதுமே மார்தட்டி கொள்ளும். ஆனால் நேற்றைய போட்டியில் மொத்தமாய் பாகிஸ்தானை ஒற்றை ஆளாக விரட்டிவிட்டார் கிங் கோலி.

Leave a comment

Type and hit enter