OOSAI RADIO

Post

Share this post

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு சென்றுள்ளார். ஏன் எதற்கு என இங்கு காண்போம். ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள், விசுவாசிகள் என அனைவரும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி ரஜினியும் போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் நான் நான்காவது முறையாக வேதா இல்லத்திற்கு வருகிறேன். முதல் முறை ஜெயலலிதா என்னுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார் அப்போது வந்தேன். அதன் பிறகு ராகவேந்திரா கல்யாண மண்டபம் திறப்பு விழாவிற்கு அழைக்க வந்திருந்தேன். மூன்றாவதாக என் மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தேன். அதன் பிறகு நான்காவது முறையாக இப்போது வருகிறேன். ஜெயலலிதா இப்போது இல்லை என்றாலும் அவருடைய நினைவுகள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்காமல் இருக்கும் எனவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter