OOSAI RADIO

Post

Share this post

போன தலைமுறை 50 வயசுல சம்பாதிச்சத இப்ப 30 வயசுலயே சம்பாதிக்கிறாங்க

நாகரிகம் வளர வளர பல விஷயங்களில் மாறுபட்டு நிற்கிறோம். அப்படித்தான் டிஜிட்டல் உலகம் என்ற பெயரில் உலகமே ஸ்மார்ட் போன் மூழ்கி கிடக்கிறது.
சிறு பிள்ளைகள் கூட ஃபோனில் வீடியோ பார்த்தால் தான் சாப்பிடுவேன் என சொல்லும் காலம் வந்துவிட்டது. இப்போதைய தாய்மார்களும் குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறு ஊட்டுவது கிடையாது. செல்போனை கொடுத்து விட்டால் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என நினைக்கின்றனர். இதுவே கண் பிரச்சனையில் தொடங்கி பல உடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

அதேபோல் இளநரை பிபி சுகர் என இன்றைய தலைமுறை 30 வயதிலேயே அனைத்து பிரச்சினையையும் சந்திக்கின்றனர். அப்போதைய காலத்தில் 50 வயதில் தான் நரைமுடி என்பதையே பார்க்க முடியும். அதேபோல் 90 வயது வரையில் கூட திடகாத்திரமாக நடமாடிய தாத்தா பாட்டியும் இருக்கின்றனர். ஆனால் இப்போது ஒரு குழந்தை பெற்றுவிட்டாலே நிற்க முடியல உட்கார முடியல என்ற புலம்பலை கேட்க முடிகிறது. ஆக மொத்தம் போன தலைமுறை 50 வயதில் சந்தித்த பிரச்சனையை நாம் 30 வயதில் சந்தித்து வருகிறோம். இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். தலைமுடி உதிர்வு, சொட்டை தலை என பல பிரச்சனைகளை மீம்ஸ் போட்டு பங்கம் செய்கின்றனர்.

Leave a comment

Type and hit enter