Post

Share this post

வரிச் சலுகைகளை முழுமையாக திரும்பப் பெற்ற அரசு

பிரிட்டன் பிரதமா் லிஸ் டிரஸ் அறிவித்திருந்த அனைத்து வரிக்குறைப்புகளையும் புதியநிதிமைச்சா் ஜெரிமி ஹன்ட் முழுமையாக திரும்பப் பெற்றாா்.
கடந்த மாதம் 23 ஆம் திகதி லிஸ் டிரஸ் அறிமுகப்படுத்திய சா்ச்சைக்குரிய ‘மினி பட்ஜெட்’டில், நிறுவனங்களுக்கான வரி உயா்வு, அதிக வருவாய் உடையவா்களுக்கு 45 சதவீத உயா் வரி போன்றவற்றை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பின் எதிரொலியாக பிரிட்டன் பொருளாதாரம் நிலைகுலைந்து, டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது. அதையடுத்து, அதுவரை நிதியமைச்சராக இருந்த க்வாசி க்வாா்டெங்கை வெள்ளிக்கிழமை நீக்கிய டிரஸ், அந்தப் பொறுப்புக்கு ஜெரிமி ஹன்டை நியமித்தாா்.

Recent Posts

Leave a comment