காலமெல்லாம் காத்திருப்பேன்

நடிகர் விஜய் ஆரம்ப காலங்களில் மசாலா மற்றும் கவர்ச்சிகரமான படங்களில் நடித்து வந்ததை மாற்றி விஜயை கொஞ்சம் வித்யாசமான கதைக்களத்துடன் ஆரம்ப காலத்தில் காட்டிய படங்களில் இதுவும் ஒன்று. 80களில் புகழ்பெற்ற இயக்குனராக இருந்த ஆர். சுந்தர்ராஜன் அடுத்த தலைமுறை ஹீரோவான விஜயை வைத்து எடுத்த படம் .
சின்ன சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்கால் ஹீரோ விஜயை நாயகி டிம்பிள் வெறுக்கிறார். ஆனால் டிம்பிளோ விஜய் மீது வரலாறு காணாத கோபத்தை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். பொறுத்து பார்த்த விஜய் டிம்பிளுக்கு கோவிலில் வைத்து தாலிகட்டுகிறேன் என கோபப்பட்டு மூர்க்கப்பட்டு நடந்துகொண்டதால் அப்பாவை இழக்கிறார்.வேலை தேடி ஊட்டிக்கு செல்கிறார். கரணிடம் கார் டிரைவராக வேலை செய்கிறார். அங்கேயே டிம்பிளும் வேலை செய்கிறார். ஆனால் டிம்பிள் விஜயை விட பெரிய வேலையில் இருக்கிறார். மேலும் கம்பெனி ஓனரான கரணும் டிம்பிளை காதலிக்க, உண்மையான காதலரான விஜய் படும்பாடும் இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
தேவா இசையில் மணிமேகலையே, நில்லடி என்றது போன்ற பாடல்கள் நன்றாக இருந்தது. கதாநாயகி டிம்பிள் நல்ல கலராக பொம்மை போல இருந்தார். இந்த படத்திற்கு பிறகு பெரியதாக நடிக்கவும் இல்லை. இப்படத்தில் கதைக்கு நடுவே மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் கூட்டணி நல்ல கலகலப்பூட்டி இருந்தது இப்படத்திற்கு பலமாய் இருந்தது. 1997 பொங்கலுக்கு இப்படம் வெளிவந்தது