OOSAI RADIO

Post

Share this post

தப்பித்த விண்வெளி நாயகன்

நடிகர் கமலஹாசன் தன்னை யாரும் உலகநாயகன் என்று அழைக்கக்கூடாது என்று அறிக்கை விட்டிருந்தார். அதிலிருந்து தற்போது விண்வெளி நாயகன் என ரசிகர்கள் கமலை சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது. கமலுக்கு கடந்த வருடம் ரிலீஸ் ஆன இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. மேலும் மிகப்பெரிய பொருளாதார தோல்வியை தழுவியது. இந்தியன் 2 படத்திற்கு இந்த நிலைமை என்றால் அதன் மூன்றாம் பாகம் என்ன ஆகப்போகுதோ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் லைகா நிறுவனம் இந்த பட தயாரிப்பில் இருந்து விலகி விட்டதாக வலைப்பேச்சு சேனலில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கமலஹாசன் கேட்டுக் கொண்டதற்காக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூலம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் பெரும்பாலும் OTT ரிலீஸ் ஆக இருக்கும் என்றும் வலைப்பேச்சு சேனல்காரர்கள் சொல்லி இருக்கிறார்கள். கமலஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மையம் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கட்சியை ஆரம்பித்ததற்கு கடைசியில் இந்தியன் 3 காப்பாற்றப்பட்டது என விமர்சகர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

Leave a comment

Type and hit enter