OOSAI RADIO

Post

Share this post

சல்லி சல்லியா நொறுங்கிய அட்லீ

தமிழில் விஜய் நடிப்பில், கடந்த 2016-ஆம் ஆண்டு தெறி படம் வெளியானது. இந்த படத்துக்கு தமிழகத்திலும், கேரளாவிலும் பெருமளவு எதிர்பார்ப்பு இருந்தது. படம் ரிலீசான முதல் நாளே வசூல் வேட்டையும் நடத்தியது. 75 கோடியில் உருவான தெறி படம், மொத்தமாக 150 கோடி-க்கு மேல் வசூல் செய்தது. விஜய் மார்க்கெட்டை இந்த படம் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது என்றே கூறலாம். இந்த நிலையில், விஜயின் செல்ல பிள்ளையாக மாறிய அட்லீ தொடர்ந்து அவருடன் மெர்சல், பிகில் ஆகிய படங்களுக்கு கூட்டணி போட்டார். அப்படி விஜயை வைத்து தொடர்ந்து படம் எடுத்துக்கொண்டிருந்த அட்லீ-க்கு தமிழ்நாட்டில், எதிர்மறையான விமர்சனம் அதிகமாக வந்தது. அட்டு காப்பி அட்லீ என்றெல்லாம் அழைத்து சமூக வலைத்தளங்களில் அவரை ட்ரோல் மெட்டிரியிலாக மாற்றினார்கள்.

இப்படி இருக்க, அவருக்கு பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட அட்லீ, ஒவ்வொரு காட்சியையும் தரமாக எடுத்து, பாலிவுட்டில் வெற்றி கொடி நாட்டினார். முதல் படத்திலே இவர் 1000 கோடி வசூல் கொடுத்ததனால், அங்கு இருக்கும் நடிகர்கள், இவரிடம் வரிசை கட்டி வர ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், தொடர்ந்து பாலிவுட்டில் படம் எடுக்க முடிவு செய்தார் அட்லீ. அப்படி வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷை வைத்து பேபி ஜான் படத்தை எடுத்தார். பயங்கரமாக ப்ரோமோஷன் செய்தார்கள். இருப்பினும், படம் தற்போது எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. தமிழ்நாட்டில் தெறி படம் முதல் நாளில் செய்த வசூலை கூட தொடவில்லை.

தெறி படம் முதல் நாளில், 13.1 கோடி வசூல் செய்தது. ஆனால் பேபி ஜான் படம், முதல் நாளில் 11 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாள் 4 கோடி கூட வசூல் செய்யவில்லை. போட்ட பணத்தையாவது எடுக்குமா என்று தெரியாத ஒரு நிலையில் தற்போது உருவாகியுள்ளது. 80 கோடி பட்ஜெட் என்றால், 150 கோடி வசூல் செய்தால் தான் அனைத்து தரப்புக்கும் லாபம் கிடைக்கும். இந்த நிலையில், பாலிவுட்டில் அட்லீ தற்போது பயங்கரமாக அடிவாங்கி ஆட்டம் காண்கிறார் என்று விமர்சித்து வருகிறார்கள். மேலும் வசூலில் ஏற்பட்ட இந்த தொய்வு, சல்மான் கான் வைத்து படம் எடுக்கவிருந்த அந்த திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.

Leave a comment

Type and hit enter