D55 அப்டேட் தரமான சம்பவம் லோடிங்

என் வழி தனி வழி என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லியிருப்பார். அது நடிகர் தனுஷுக்கு தான் சரியாக பொருந்தும் போல. விரும்பிப் பார்க்க நேரம் என்று நடிப்பு, இயக்கம் என சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார். தமிழில் ஏற்கனவே இட்லி கடை படம் ரிலீஸ் க்கு ரெடியாக இருக்கிறது. அதே நேரத்தில் தெலுங்கில் நாகார்ஜுனா உடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் குபேரா படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
இன்னொரு பக்கம் இந்தி படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த அமரன் பட இயக்குனர் தனுசு உடன் இணைய போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் தன்னுடைய 55வது படத்தை இயக்கும் இயக்குனரையும் லாக் செய்துவிட்டார் தனுஷ். சமீபத்தில் ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி இருக்கும் படம் லப்பர் பந்து. இந்த படத்தை இயக்கிய தமிழரசன் பச்சை முத்து உடன் தான் தனுஷ் இணைகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படம் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் திரைக்கதை எழுதும் வேலை தொடங்க இருக்கும் நிலையில் இந்த பதத்திற்கு அனிருத் தான் இசையமைப்பார் என தெரிகிறது.