OOSAI RADIO

Post

Share this post

சுத்தமா முடியலன்னு சுந்தர் சி இடம் சரண்டர் ஆன நடிகர்

சுந்தர் சி எப்பொழுதுமே தனக்கு உண்டான தனி பாணியில் படங்களை உருவாக்கி, ஹிட் அடித்து விடுவார் இவருடைய சிக்னேச்சர் படமான அரண்மனை பாகங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இடையிடையே இவர் ஹீரோவாகவும் நடித்து அசத்துவார். இப்பொழுது மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப் போகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த மதகஜராஜா படம் சூப்பர் ஹிட். ஆனால் அந்த படம் 13 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இருந்தாலும் இவருடைய சிக்னேச்சர் ஸ்டைலான காமெடி மற்றும் கிளாமர்ரை வைத்து மீண்டும் ஒரு ஹிட் படத்தை ருசித்துள்ளார். மீண்டும் அதே கூட்டணியில் மற்றொரு படம் உருவாக்க திட்டம் போட்டு வருகிறார்.

சமீபத்தில் நடிகர் கார்த்தி சுந்தர் சியை சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார்கள். சமீப காலமாக நடிகர் கார்த்திக்கு எந்த ஒரு படமும் கை கொடுக்கவில்லை அதனால் இப்பொழுது சுந்தர் சியை நம்பி தன்னுடைய கேரியரை ஒப்படைத்து விட்டார். கார்த்தி நடிப்பில் சர்தார் 2 படம் உருவாகி வருகிறது. அந்தப் படத்தை தான் அவர் பெரிதும் நம்பி இருக்கிறார். அதற்கு முன்னர் அவர் நடித்த ஜப்பான், மெய்யழகன் போன்ற படங்கள் அவருக்கு பிளாப் படமாக அமைந்தது. கடைசியாக இவருக்கு சர்தார் முதல் பாகம் மட்டும் ஹிட் லிஸ்டில் சேர்ந்துள்ளது.
சுந்தர்சியை நம்பி எந்த ஒரு தயாரிப்பாளரும் தைரியமாக களம் இறங்குவார்கள். ஆனால் நடிகர் கார்த்தி என்று வரும்போது சற்று தயங்குகிறார்கள். ஏற்கனவே கார்த்தி நடித்த ஜப்பான் படத்தால் தயாரிப்பாளர் ஒருவர் தலையில் துண்டை போட்டு உள்ளார். அதனால் ரைட்டை நம்பினாலும் கார்த்தி என்பதால் யோசிக்கின்றனர்.

Leave a comment

Type and hit enter