Post

Share this post

நவ.19 பாராளுமன்றத்துக்கு தோ்தல்!

மலேசியாவில் அடுத்த மாதம் 19 ஆம் திகதி பொதுத் தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தோ்தல் ஆணையா் அப்துல் கனி சலே (படம்) வியாழக்கிழமை கூறியதாவது:
பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 19 ஆம் திகதி தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் 3 மாகாணப் பேரவைகளுக்கான தோ்தலும் நடத்தப்படும்.
அந்த தோ்தலுக்கான வேட்பு மனுக்களை நவம்பா் 5 ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். பொதுத் தோ்தலில் வாக்களிக்க 2.2 கோடி வாக்காளா்கள் தகுதி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.
13 மாகாணங்களைக் கொண்ட மலேசியாவில், 4 மாகாணப் பேரவைகளுக்கு ஏற்கெனவே தோ்தல் நடந்து முடிந்துவிட்டது. மத்திய அரசின் எதிா்க்கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளால் ஆளப்படும் 6 மாகாணங்கள், தங்களது பேரவைக்கான ஆயுள்காலம் முடியும் வரை பொறுத்திருந்து அடுத்த ஆண்டு தோ்தல் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துவிட்டன.
எனவே, எஞ்சிய 3 மாகாணங்களுக்கு பாராளுமன்றத்துடன் சோ்த்து முன்கூட்டியே 19 ஆம் திகதி தோ்தல் நடைபெறவிருக்கிறது.
தற்போதைய பிரதமா் சாப்ரி யாகூப் அங்கம் வகிக்கும் ஐக்கிய மலேசிய தேசிய கட்சி (உம்னோ), கடந்த 1957 இல் மலேசியா சுதந்திரம் பெற்றதிலிருந்தே அந்த நாட்டை ஆண்டு வந்தது. எனினும், கடந்த 2018 ஆம் ஆண்டு தோ்தலில் அந்தக் கட்சி முதல்முறையாக தோல்வியடைந்தது. அப்போது பிரதமராக இருந்த நஜீப் ரஸாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஏற்பட்ட அந்தத் தோல்வியைத் தொடா்ந்து, முன்னாள் பிரதமா் மகாதிா் முகமதுவின் தலைமையில் புதிய அரசு அமைந்தது.
எனினும், கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறியதால் மகாதிா் அரசு 2020 ஆம் ஆண்டு கவிழ்ந்தது. அதற்குப் பதிலாக, மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவா் முஹைதீன் யாசின் தலைமையில் புதிய அரசு அமைந்தது. எனினும், அந்த அரசுக்கும் உம்னோ கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் முஹைதீன் ஆட்சி 17 மாதங்களில் கவிழ்ந்தது.
பிறகு, ஆளும் கூட்டணியில் அதிக இடங்களை வைத்திருக்கும் உம்னோ கட்சி சாா்பில் சாப்ரி யாகூபை இடைக்காலப் பிரதமராகக் கொண்டு புதிய அரசு அமைக்கப்பட்டது. எனினும், அவரது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை.
இந்தச் சூழலில், புதிதாக தோ்தல் நடத்தி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நோக்கில் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அதனை கலைக்கப்பதாக பிரதமா் சாப்ரி யாகூப் கடந்த 10 ஆம் திகதி அறிவித்தாா்.
அதை அடுத்து, மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் பருவமழைக் காலமான நவம்பா் மாதத்தில் தோ்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த பருவமழைக் காலத்தின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் 50 க்கும் மேற்பட்டோா் பலியான நிலையில், பிரதமரின் இந்த முடிவு பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், அடுத்த மாதம் 19 ஆம் திகதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.

Recent Posts

Leave a comment