பிக்பாஸில் குறும்படம் – மாட்டிக்கொண்ட விக்ரமன்! (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் குறித்த குறும்படத்தை ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 9 ஆம் தேததி துவங்கிய பிக்பாஸ் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்க முடியும் என்பதால் அடிக்கடி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது.
தற்போது ஜி.பி. முத்து மக்களின் ஃபேவரைட்டாக இருக்கிறார். அதே போல அசல் குவின்ஸியிடம் நடந்து கொள்ளும் முறை விமர்சனங்களை சந்தித்துவருகிறது. நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்கள் குறித்து தனது விமர்சனங்களை பதிவு செய்தவதற்கு முன்பாகவே ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.
அந்த வகையில் விக்ரமன் குறித்து குறும்படம் ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள். அதில் அசல் மற்றும் தனலட்சுமி இருவரும் சண்டைபோட்டுக்கொள்ளும்போது விக்ரமன் அருகில் தான் இருக்கிறார்.
பின்னர் எதுவுமே தெரியாததுபோல தனலட்சுமியிடம் என்ன ஆனது எனக் கேட்கிறார் என ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மற்றொருபுறம் விக்ரமின் ரசிகர்கள் அவர் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பைக் காட்டுவதாகவும் இந்த விடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
Kurum padam for #Vikraman 🤣🤣🤣
He was standing there at the start of fight itself… Apuram sudden aha yethum theriyatha mathri yena nadanchunu kekarthu…
He could have stopped at the starting stage itself… He didn't asked #Asal instead he has gone to her#BiggBossTamil6 pic.twitter.com/kmt30w5QhE
— Dr.Ilavarasi (@Ilavarisirk) October 20, 2022