கமல் லைன் அப்-ல் இருக்கும் 7 படங்கள்

கட்சி ஆரம்பித்த புதிதில் கமல் சினிமாவுக்கு சிறு பிரேக் விட்டிருந்தார். விக்ரம் அவருக்கு நல்ல ரீ என்ட்ரியாக அமைந்தது. அதை அடுத்து தற்போது அடுத்தடுத்த படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வருடம் கல்கி, இந்தியன் 2 ஆகிய படங்கள் வெளிவந்தது. இதில் சங்கர் கூட்டணி நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது.
ஆனாலும் பார்ட் 3 அதை சரி கட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமல் அரசியலை ஓரங்கட்டி விட்டு நடிப்பில் பிஸியாகி இருக்கிறார். அதன்படி அடுத்தடுத்து அவருடைய ஏழு படங்கள் வெளிவர இருக்கிறது. அதில் தக் லைஃப் ஜூன் 5ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
அதை தொடர்ந்து இந்தியன் 3, கல்கி 2, விக்ரம் 2, அன்பறிவு இயக்கும் KH 237, H.வினோத் கூட்டணியில் ஒரு படம், அட்லியுடன் ஒரு படம் என லைன் கட்டி நிற்கிறது.
இது தவிர மீண்டும் மணிரத்தினம் கூட்டணி இணையும் என்று கூட ஒரு பேச்சு உள்ளது. இப்படியாக கமல் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பில் கூட கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஆண்டவர் வெளிநாட்டிற்கு சென்று Ai பற்றிய படிப்பையும் முடித்துள்ளார். அதனால் இன்னும் சில படங்களின் அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.