OOSAI RADIO

Post

Share this post

1000 எபிசோடுக்கு மேல் வந்த சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் சீரியல்கள்

சின்னத்திரை மூலம் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்பொழுதுமே குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு பெண்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு புத்தம் புது நாடகங்களை இறக்கி கிட்டத்தட்ட 15 சீரியல்களை ஒளிபரப்பு செய்கிறார்கள். அப்படி சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் சேனல்கள் போட்டி போட்டு அடுத்தடுத்த வரிசையில் இருக்கிறார்கள்.
அதில் எப்பொழுதுமே சன் டிவி தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவதாக விஜய் டிவி மற்றும் மூன்றாவது இடத்தில் ஜீ தமிழ் சேனல் இருக்கிறது. அந்த வகையில் இந்த மூன்று சேனல்களில் உள்ள சீரியல்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து சீரியலுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
தற்போது இந்த மூன்று சேனல்களிலும் கூடிய சீக்கிரத்தில் முடிவுக்கு வரப்போகும் நான்கு முக்கியமான சீரியல்கள் எதுவென்று தகவல் வெளிவந்திருக்கிறது. அத்துடன் இந்த நான்கு சீரியலுமே கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. இதில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் மற்றும் மாரி சீரியல்.
இந்த இரண்டு சீரியல்களுமே முடிவுக்கு வந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் வருவதால் சேனல் தரப்பில் இருந்து கயல் சீரியலை முடிக்க சொல்லி உத்தரவு வந்துவிட்டது. அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் இன்னும் ஒரு மாதத்தில் முடிவுக்கு வந்து விடுவது போல் தகவல் வெளியாயிருக்கிறது.

மேலும் இந்த நான்கு சீரியல்களுமே மக்களின் ஆதரவை பெற்றதால் ஆயிரம் எபிசோடுகளை கடந்திருக்கிறது. ஆனாலும் கதை எதுவும் இல்லாமல் அரைச்ச மாவே அரைச்சு கொண்டு வருவதால் இதற்கு விடிவுகாலம் பிறந்து விட்டது.

Leave a comment

Type and hit enter