OOSAI RADIO

Post

Share this post

தனுஷை ஓரம் கட்டிய பிரதீப்

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டிராகன் மற்றும் தனுஷின் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. இந்த இரு படங்களுக்குமே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
தனுஷ் தனது அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். இளம் தலைமுறைகள் இடையே இருக்கும் காதலை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இந்நிலையில் ஏஜிஎஸ் தயாரிப்பில் ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படம் உருவாகி இருந்தது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் தமிழ்நாட்டில் மட்டும் தற்போது வரை ஏழு கோடி வசூல் செய்து உள்ளது. ஆனால் டிராகன் படம் உலக அளவில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

சினிமாவில் பல வருடங்களாக பயணித்து வரும் தனுஷ் இப்போது இந்த படத்தின் மூலம் சிறு சறுக்களை சந்தித்துள்ளார். மேலும் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சி விஸ்வரூபம் அடைந்துள்ளது.
ஏனென்றால் பிரதீப்பின் லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய இரு படங்களுமே 100 கோடி வசூலை எட்டி இருக்கிறது. அதோடு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லீக் படமும் உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் தெலுங்கு சினிமாவிலும் பிரதீப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a comment

Type and hit enter