Post

Share this post

ஆப்பு வைக்கும் ரணில் – முகநூலில் அம்பலம்!

பிரதமராக பதவியேற்றபோது, கோட்டாபயவுக்கு எதிராக நடக்கும் போராட்டம் தொடரட்டும் என்று ரணில் மேற்கொண்ட அறிவிப்பு ரணிலை ஜனநாயகவாதியாக காட்டினாலும், ராஜபக்சக்களுக்கு ஆப்பு வைக்கும் பிள்ளையார் சுழி அதுவென நான் அப்போதே சொன்னதாக சிவா இராமசாமி என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் முகநூலில் பதிவிட்ட கருத்து,

அப்போது எல்லோரும் ஏளனம் செய்தார்கள்… ஜனாதிபதியாகினார் ரணில்.. பின்னர் கோட்டாபய பின்கதவால் சென்றது முதல், பசில் வெளிநாடு போக விமான நிலையத்தில் தடுமாறியதுவரை சம்பவங்கள் அரங்கேறின.
பசில் பாராளுமன்றம் பக்கம் தலைவைத்து படுக்க முடியாதளவுக்கு நிலைமை வந்திருக்கிறது.. இது ரணிலின் இறுதியல்ல, இதுதான் ஆரம்பம்.
22 ஆவது திருத்தத்தை பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொண்டமைக்காக, ரணிலுக்கு எதிராக பசிலின் ஆதரவு எம்.பிக்கள் இனி போர்க்கொடி தூக்கினால் பாராளுமன்றத்தை உரிய நேரத்தில் கலைத்து அவர்களை வீதியில் விடுவார் ரணில்.
பசிலுக்கு பாராளுமன்ற பலம் இருந்திருந்தால் இன்று இதனை தோற்கடித்திருக்கவேண்டும்… ஆனால் அது இல்லை என்பது தெரிந்துவிட்டது.
இன்று 22 நிறைவேறியது ஒரு பக்கம்.. பசில் ஆதரவாளர்கள் என்று இருந்தவர்கள் பகிரங்கமாகவே தங்களை அடையாளம் காட்டிக்கொண்டது இன்னொரு பக்கம்.
ஆட்டோக்கார ரஜினியாக இருக்கும் ரணில், மும்பையில் என்ன செய்துகொண்டிருந்தார் என்று பசில் ஆதரவு அணி தலைமயிரை பிய்த்துக் கொள்ளாத குறை தான் என குறித்த நபர் ரணில் நடவடிக்கையை முகநூலில் வெளியிட்டுள்ளனர்.

Leave a comment