OOSAI RADIO

Post

Share this post

கிழக்கு சீமையிலே பட பேச்சி

ஆத்தங்கர மரமே, கிழக்குச் சீமையிலே படத்தில் வரும் இந்த பாடல் 2k கிட்ஸ்கள் வரை பிரபலம். தமிழில் பாசமலருக்குப் பிறகு வந்த அண்ணன் தங்கை சென்டிமென்ட் படம் இது. இதில் ராதிகா மற்றும் நெப்போலியன் நெற்கு மகளாக பேச்சு என்னும் கேரக்டரில் நடித்தவர்தான் அஸ்வினி. இவர் பல வருடங்களுக்குப் பிறகு சூழல் வலைத்தொடர் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது சாய் வித் சித்ரா பேட்டியில் இவர் பேசி இருக்கும் விஷயம் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. வீட்டில் படப்பிடிப்பு என்று கூறி அஸ்வினியை ஒரு இயக்குனர் வீட்டிற்கு வர வைத்திருக்கிறார்.

படப்பிடிப்புக்காக ஹேர் ஸ்டைலிஸ்ட் உடன் இருக்கிறார். அப்போது உதவியாளர் ஒருவர் இயக்குனர் மேலே உள்ள அறைக்கு கூப்பிடுகிறார் என்று சொல்லி இருக்கிறார். அஸ்வினியும் எதைப் பற்றியும் யோசிக்காமல் அங்கே சென்று இருக்கிறார். அந்த அறைக்குள் இயக்குனர் அஸ்வினியிடம் தவறாக நடந்து இருக்கிறார். கிட்டத்தட்ட அவர் ஹீரோயினாக நடித்து 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தனக்கு நேர்ந்த அவலத்தை பற்றி பேசி இருக்கிறார்.


இரசிகர்கள் பலரும் கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்கும் பொழுது பாரதிராஜா தான் இப்படி செய்து இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் ரெட்டிட் வலைதளத்தில் ராமன் அப்துல்லா படத்தில் நடிக்கும் பொழுது பாலு மகேந்திரா இந்த விஷயத்தை செய்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அஸ்வினி இந்த சம்பவத்தை செய்தது மலையாள இயக்குனர் ஒருவர் என்று, கேரளா சேனல் ஒன்றின் பேட்டியில் சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Leave a comment

Type and hit enter