OOSAI RADIO

Post

Share this post

அறிவுக்கரசியை கழட்டி விட நினைக்கும் குணசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், காசு இருந்தால் தான் எல்லோரும் மதிப்பாக என்பதற்கு உதாரணமாக சக்தி நிலைமை இருக்கிறது. காசு இல்லை என்றால் செல்லா காசாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டார். அந்த வகையில் சக்தியை எல்லோரும் ஜனனி பின்னாடி பொம்பள மாதிரி சுத்திகிட்டே இருக்கிறான்.சம்பளம் இல்லாத ஒரு டிரைவர் என்று வார்த்தைகளால் குத்தி காயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் அதை எல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் சக்தி, ஜனனியுடன் இருந்த நிலையில் ஜனனி அப்பா நாச்சியப்பனும் குணசேகரன் என்கிற அடையாளத்தை விட்டு சக்தி தனியாக தெரிய வேண்டுமென்றால் அவருடைய இலட்சியத்தில் அவர் ஜெயிக்க வேண்டும்.

உன்னுடைய சுயநலத்திற்காக சக்தியை பகடைக்காயாக பயன்படுத்தாதே என்று ஏற்கனவே அறிவுரை கொடுத்திருந்தார். அப்பொழுது கூட சக்தி புத்திக்கு எட்டவே இல்லை. ஆனால் இப்பொழுது அவருடைய நிலைமை என்னவென்று அவருக்கு உணர்ந்து விட்டது. அதாவது ஒரு டீ குடிக்க கூட காசு இல்லாமல் பிச்சைக்காரனை விட ரொம்ப மோசமாக அவமானத்தை சந்தித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் சக்தி எல்லோரும் சொன்னதை நினைத்துப் பார்த்து உக்கிரமாக இருக்கிறார். இந்த கோபத்தை எல்லாம் காட்டும் விதமாக எனக்கு என்று சுயமாக சிந்திக்கும் அறிவு இருக்கிறது. மற்றவர்கள் யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று யோசித்து நான் என்னையே மறந்து விட்டேன் என தற்போது ஜனனிடம் புலம்புகிறார்.

இவருடைய கேரக்டரை பார்க்கும்பொழுது எங்கே மறுபடியும் குணசேகரனின் தம்பி என்பதை நிரூபிக்கும் வகையில் அந்நியனாக மாறிவிடுவாரோ என்ற ஒரு பயம் இருந்தது. ஆனால் சக்தி நான் அப்படியில்லை எனக்கு என்று சில பொறுப்புகள் இருக்கிறது ஆசைகள் இருக்கிறது அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என ஜனனிடம் சொல்லி முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் இனி சக்தி அவருடைய சொந்த காலில் நின்னு ஜெயித்து கெத்தாக வருவார். இதனை தொடர்ந்து குணசேகருக்கு தற்போது நாம் செய்யும் விஷயம் சரியாக இருக்குமா என்று ஒரு சின்ன சந்தேகம் வந்துவிட்டது. முக்கியமாக கதிருக்கு சொத்தை எழுதிக் கொடுத்தது தவறு என்பதை உணரும் வகையில் யோசித்துப் பார்க்கிறார். அதுமட்டுமில்லாமல் தர்ஷன் ஏற்கனவே காதல் விஷயத்தில் சிக்கிருக்கிறார்.

தற்போது அறிவுக்கரசி கூட்டணி வைப்பது சரியாக இருக்குமா என்று பல யோசனையில் இருக்கிறார். இதை புரிந்து கொண்ட அறிவுக்கரசி, நம்மளை கழட்டி விட பார்க்கிறாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. ஆனாலும் அப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்காக குணசேகரை சந்தித்து பேசப் போகிறார். இன்னொரு பக்கம் கதிர் ஏற்கனவே அறிவுக்கரசி பேச்சு கேட்டு ஆடும் ஒரு பொம்மையாக தான் இருக்கிறார். அதனால் கதிர் மூலமாகவது நெனச்சதை சாதித்து காட்ட வேண்டும் என்று அறிவுக்கரசி, கதிரை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்.

Leave a comment

Type and hit enter