OOSAI RADIO

Post

Share this post

கஜானாவை காலி செய்த சூர்யா, அஜித்

பொதுவாக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் டாப் நடிகர்களை வைத்து படம் எடுத்தால் பெரிய அளவில் லாபம் பெறலாம் என்று கருதுகின்றனர். அதனால் ஹீரோக்கள் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அதை வாரி வழங்குகின்றனர். ஆனால் இப்போது சூர்யா, அஜித் போன்ற நடிகர்களை நம்பி பணத்தை போட்டு பெரும் நஷ்டத்தை தயாரிப்பு நிறுவனங்கள் சந்தித்திருக்கிறது. கடந்த வருடம் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் கங்குவா படம் உருவாகி இருந்தது.


படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வெளியிட்டிருந்தனர். சூர்யா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஸ்டுடியோ கிரீனுக்கு கிட்டத்தட்ட 130 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதோடு கங்குவா படம் இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து லைக்கா தயாரிப்பு நிறுவனம் அஜித்தின் விடாமுயற்சி படத்தை தயாரித்தது. மூன்று வருடமாக இந்த படம் இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
இப்படம் கிட்டத்தட்ட 280 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வசூல் 153 கோடி மட்டுமே செய்த நிலையில் 127 கோடி நஷ்டத்தை லைக்கா சந்தித்திருக்கிறது. ஏற்கனவே தொடர் தோல்வியால் லைக்கா நிதி நெருக்கடியில் இருக்கிறது.
இப்போது விடாமுயற்சி படம் மேலும் அவர்களை கடனில் தள்ளி இருக்கிறது. டாப் நடிகர்களை நம்பி தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் தொகையை போட்டு இப்போது செய்வதறியாமல் விழி பிதுங்கி இருக்கின்றனர்.

Leave a comment

Type and hit enter