வதந்திகளைப் பொய்யாக்கிய விஜய்!

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திலிருந்து தீபாவளியை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கையில் சுத்தியலுடன் மாஸாக விஜய் காட்சியளிக்கிறார்.
மேலும் கேஜிஎஃப் படத்திலும் இதே போல யஷ் சுத்தியலுடன் இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்து வாரிசு போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதாக கன்னட ரசிகர்கள் கூற, இரு ரசிகர்களும் காரசாரமாக விவாதித்துக்கொண்டனர்.
மற்றொருபுறம் இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வாரிசு பொங்கலுக்கு வெளியாவதை இந்த போஸ்டர் உறுதிசெய்துள்ளது. முன்னதாக பிரபாஸின் ஆதிபுருஷ் பொங்கலுக்கு வெளியாவதால் வாரிசு பட ரிலீஸ் தள்ளிவைக்கப்படும் என்று கூறப்பட்டது.