OOSAI RADIO

Post

Share this post

தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ள மாஸ் ஹீரோ

தனுஷ் இப்போது இயக்கம், நடிப்பு என பட்டைய கிளப்பி வருகிறார். சமீபத்தில் அவருடைய இயக்கத்தில் உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுசுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இட்லி கடை படம் வருகின்ற ஏப்ரல் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி படமும் வெளியாக உள்ளது.

ஒரே நாளில் இரு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குட் பேட் அக்லி படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களில் கவனத்தை பெற்றுள்ளது. இதனால் தனுஷின் இட்லி கடை படத்தின் வசூல் பாதிக்கும் என கூறப்பட்டது. அதன்படி இப்போது இட்லி கடை ரீலீஸ் தள்ளிப்போய் உள்ளது. ஆகையால் அஜித்தின் குட் பேட் அக்லி படம் தனி காட்டு ராஜாவாக வெளியாக உள்ளது. அதோடு யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்னவென்றால் அஜித்தின் படத்தை தனுஷ் இயக்க இருக்கிறார். அதுவும் தனது வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்த முடிவு செய்துள்ளனர். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருக்கிறது. தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பது யாரும் சிறிது கூட எதிர்பார்க்காத விஷயம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல தனுஷ் தனது இட்லி கடை படத்தின் வசூல் பாதிக்காமலும், அஜித்தின் பட வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். இந்த செய்தி அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Leave a comment

Type and hit enter