நடிகை பூர்ணா திருமணம் முடிந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஷாம்னா காசிம் என்ற பூர்ணா தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நடிகை பூர்ணாவுக்கும் ஷனித் ஆசிஃப் அலி என்பவருக்கும் (அக்டோபர் 25) திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.