உயர்ந்த நடிகருக்கு வந்த திடீர் காதல்

சர்ச்சைகளுக்கு பெயர் போன அந்த உயர்ந்த நடிகர் நடிக்க வந்த புதிதிலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெறவே அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். ஆனால் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல் ஏதாவது வம்பை விலைக்கு வாங்கி விடுவார் நடிகர். இதனால் சீனியர் குரூப்புக்கும் இவருக்கும் பனிப்போர் நடந்தது கூட அனைவருக்கும் தெரியும்.
அதை அடுத்து அவருடைய படங்களும் தொடர் தோல்வியை அடைந்தது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள நடிகர் பிசியாக நடித்து வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு மூன்றெழுத்து நடிகை ஒருவரின் மீது காதல் வயப்பட்டார். அதை மீடியாவி ல் கூட நாசுக்காக தெரியப்படுத்தினார்.அதைத்தொடர்ந்து நடிகரின் தரப்பிலிருந்து நடிகை வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார்கள். ஆனால் நடிகையின் அம்மாவோ முடியாது என மறுத்து விட்டாராம். இதற்கு காரணம் நடிகரின் வரலாறு அப்படி. இதனால் சில காலம் சோகத்தில் இருந்த நடிகர் ஒரு வழியாக திருமணத்திற்கு தயாரானார். அதுவும் பாதியிலேயே நின்று போனது.