OOSAI RADIO

Post

Share this post

மனவேதனையில் எடுத்த விபரீத முடிவு, தீவிர சிகிச்சையில் பாடகி கல்பனா

சமீபகாலமாக சினிமா துறையில் தற்கொலை முயற்சி செய்வது அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி மேற்கொண்டு தீவிர சிகிச்சையில் இருப்பது பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது. இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்தவர் தான் ராகவேந்தர். இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் அப்பாவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த தனது மகளுடன் வசித்து வந்த ராகவேந்தர் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நிலை காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் கல்பனா குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் நடிக்க தொடங்கினார். மேலும் தந்தை போல இசை மீது ஆர்வம் இருந்ததால் பின்னணி பாடகியாக வளம் வந்தார். போகிறேன் நான் போகிறேன், டார்லிங் டம்பக், காத்தாடி போல என் சுத்துற போன்ற பல ஹிட் பாடல்களை கல்பனா பாடி இருக்கிறார். அதோடு சின்னத்திரை தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த சூழலில் ஹைதராபாத்தில் வசித்து வரும் கல்பனா திடீரென தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இரண்டு நாட்களாக வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளார். அதன் பிறகு அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.
மேலும் சுயநலவின்றி கல்பனா கிடந்த நிலையில் அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இப்போது அவருக்கு தீவிரை சிகிச்சை அளித்து வருகிறது. இந்தச் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a comment

Type and hit enter