OOSAI RADIO

Post

Share this post

அஜித்தை காப்பி அடித்த நயன்

அஜித் தனக்கென ஒரு கொள்கையோடு இருப்பார். அதனாலேயே அவர்கள் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தற்போது அவருடைய ஒரு கொள்கையை நயன்தாரா பின்பற்றியுள்ளார். என்னவென்றால் அஜித் தன்னை யாரும் தல என கூப்பிட வேண்டாம் என்றும் கடவுளே அஜித்தே என சொல்லாதீர்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.

அதேபோல் நயன்தாரா தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என ஒரு அறிக்கை விட்டுள்ளார். ஆனால் அஜித் அளவுக்கு வொர்க் இல்லை என இணையவாசிகள் அவரை கிழித்து தொங்கவிட்டுள்ளனர். ஏனென்றால் இப்படி ஒரு பட்டத்தை அவருக்கு யாரும் கொடுக்கவில்லை. தனக்குத்தானே பட்டம் கொடுத்து அழகு பார்த்துக் கொண்டார் நயன்.

தன்னுடைய படத்தில் இப்படி ஒரு டைட்டிலை போட சொன்னது அவர்தான். இதை வலைப்பேச்சு பிரபலம் வெளிப்படையாக போட்டு உடைத்து இருந்தார். ஆனால் நயன்தாரா ஒரு பேட்டியில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் இப்படி ஒரு டைட்டிலை போட்டுட்டாங்க என பச்சையாக புளுகி இருந்தார். அதை தற்போது நினைவுபடுத்தும் ரசிகர்கள் உங்களை யாரும் அப்படி கூப்பிடல என பங்கம் செய்து வருகின்றனர். ஏற்கனவே தனுஷ் விவகாரத்தில் இவருடைய பெயர் டேமேஜ் ஆகியிருந்தது.அதேபோல் தற்போது சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக சிக்கியிருக்கிறார் நயன்.

Leave a comment

Type and hit enter