Post

Share this post

ரஜினிகாந்த் வழங்கும் திரை விமர்சனம்!

ரிஷப் ஷெட்டியின் கன்னடப் படமான காந்தாராவைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா என்ற கன்னடத் திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்துவருகிறது.
இதனையடுத்து ரூ.17 கோடிக்கு உருவான இப்படம் உலக அளவில் ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஜிஎஃப் படத்துக்கு பிறகு உலக அளவில் அறியப்படும் கன்னடப் படமாக காந்தாரா இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக காந்தாரா படத்தைப் பாராட்டி எழுதியுள்ளார். அதில், ”தெரிந்ததை விட தெரியாதது அதிகம் – இதனை காந்தாரவில் சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். என் உடல் சிலிர்த்தது.
ரிஷப் ஷெட்டி, எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என உங்கள் பணி சிறப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் சிறப்பான படத்தை கொடுத்ததற்காக ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

Leave a comment