Post

Share this post

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரை பறித்த தேனீர்

உத்தரபிரதேச மாநிலம் நக்லா கான்கை கிராமத்தில் வசித்தவர் சிவானந்தம் (வயது 35). இவரது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு சிவானந்தத்தின் மனைவி மூலிகை டீ போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை சிவானந்தம், அவரது மகன்கள் மற்றும் மாமனார், உறவினர் அருந்தி உள்ளனர்.
மூலிகை டீ அருந்திய சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சிவானந்தம் உட்பட 5 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் சிவானந்தத்தின் மனைவி, டீ தயாரித்த மூலிகை செடி விஷத்தன்மை கொண்டதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recent Posts

Leave a comment