ஈரானிலுள்ள மசூதியொன்றில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலுக்கு, அங்கு நடைபெற்று வரும் அரசு எதிா்ப்புப் போராட்டங்கள் தான் காரணம் என்று தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியும் அதிபா் இப்ராஹிம் ரய்சியும் குற்றம் சாட்டியுள்ளனா்.
15 பேரது உயிரிழப்புக்குக் காரணமான அந்தத் தாக்குதல், தொடா்ந்து நடைபெற்று வரும் ‘கலவரத்தை’ பயன்படுத்தியே நடத்தப்பட்டதாக அவா்கள் கூறினா்.
ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக குா்து இனத்தைச் சோ்ந்த மாஷா அமீனி கடந்த மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டாா்.
காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவா், பின்னா் உயிரிழந்தாா். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை அடக்க போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சுமாா் 200 போ் பலியாகினா்.