நடிகையிடம் அத்துமீறி நடந்து கொண்ட இயக்குனர்

இளம் வயதிலேயே நடிகையாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். பிரபலமான இயக்குனர் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் எப்போதும் தனது அம்மாவுடன் தான் நடிகை சூட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஒரு நாள் அவரது அம்மாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியாக சென்று இருக்கிறார். அதுவும் அவருக்கு மேக்கப் போடுவது பெண்கள் தான் என்பதால் தைரியமாக நடிகையை அவரது அம்மா அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் அப்போது நடிகைக்கு பெரிய விவரம் எதுவும் தெரியாததால் விளையாட்டுத்தனமாக இருந்திருக்கிறார். சூட்டிங் சமயத்தில் இயக்குனர் நடிகையை மேலே அழைத்திருக்கிறார். இவரும் அங்கே சென்றுள்ளார். ஆனால் அங்கு இயக்குநரை தவிர வேறு யாரும் இல்லையாம். அதோடு நடிகையிடம் அத்துமீறில் நடந்திருக்கிறார். இதனால் அழுது கொண்டே நடிகை வீட்டுக்கு வந்து விட்டாராம். மேலும் தனது அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு நடிகையின் அம்மா மிகுந்த மன உளைச்சலுக்கு சென்று விட்டாராம். மேலும் நடிகையும் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.தப்பு செய்த அவரே உயிரோடு இருக்கும்போது நீ ஏன் சாகும் முடிவை எடுத்தாய் என சமாதானப்படுத்தினார்கள். இது போன்ற பல கொடுமைகள் சினிமாவில் இருப்பதாக நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.