OOSAI RADIO

Post

Share this post

இப்ப தான் லேடி சூப்பர் ஸ்டார் இல்லையே

நேற்று இனி என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு பாராட்டுக்கள் குவியும் என்றுதான் அவர் எதிர்பார்த்து இருப்பார். அதற்கு மாறாக நெட்டிசன்கள் யாரும் உங்களை அப்படி கூப்பிடல நீங்களும் உங்க புருஷனும் தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க என கலாய்த்தனர்.

அதேபோல் சோசியல் மீடியாவில் பல ட்ரோல் மீம்ஸ் வைரலானது. இந்நிலையில் இன்று அவர் நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நடைபெற்று வருகிறது.
அதில் இயக்குனர் சுந்தர் சி உட்பட குஷ்பூ, மீனா, டிடி, ரெஜினா, அபிநயா என பலரும் கலந்து கொண்டனர். எங்கே நயன்தாராவை காணும் அவர் வருவாரா வழக்கம் போல நிராகரிப்பாரா என்ற சலசலப்பு இருந்தது.

ஆனால் திடீரென பட பூஜைக்கு நயன் வருகை தந்துள்ளார். அந்த வீடியோக்கள் தான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. எத்தனை கோடி கொடுத்தாலும் பூஜையில் ஆரம்பித்து எந்த பிரமோஷனுக்கும் வரமாட்டேன் என்பதுதான் இவரின் பாலிசி. ஆனால் சொந்த படம் என்றால் மட்டும் இந்த பாலிசி மறந்து போய்விடும். அப்படி இருப்பவர் தற்போது இந்த பட பூஜையில் கலந்து கொண்டிருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.ஆனால் இப்போதுதான் அவர் லேடி சூப்பர் ஸ்டார் இல்லையே. அதனால் கலந்து கொண்டிருப்பார் என்ற நக்கல் கமெண்ட்டுகளும் பறக்கிறது.

Leave a comment

Type and hit enter