OOSAI RADIO

Post

Share this post

பழனிவேலுவிடம் அவமானப்பட்ட சுகன்யா, உச்சகட்ட அராஜகத்தில் பாண்டியன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், என்னதான் கண்டிப்புடன் வளத்தாலும் கூட இருக்கிறவங்க சகவாசம் சரி இல்லை என்றால் தடம் புரண்டு தான் போவார்கள் என்பதற்கு உதாரணம் தான் பாண்டியனின் மகள் அரசி. அதாவது வீட்டிற்கு ஏற்ற பிள்ளையாகவும் அப்பாக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து பயத்துடன் இருந்த அரசி மனசுக்குள் தற்போது சுகன்யா விதைத்த விஷம் தான் குமரவேலுவை நம்பி காதலிக்க வைத்து விட்டது. அந்த வகையில் அரசி மற்றும் குமரவேலு யாருக்கும் தெரியாமல் தனியாக சந்தித்து பேச ஆரம்பித்து விட்டார்கள். காதல் கல்யாணம் வரை பேசிய நிலையில் இரண்டு பேரும் பைக்கில் ஊர் சுற்றவும் ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் போகும்பொழுது குமரவேலு சொன்னதெல்லாம் கேட்கும்படியாகவும் இரண்டு பேரும் ஒன்றாக இளநீர் குடிப்பது போன்ற விஷயங்களை அரசி துணிந்து செய்ய ஆரம்பித்து விட்டார்.

அந்த வழியாக சினிமாவுக்கு கிளம்பி போன பழனிவேலு மற்றும் சுகன்யாவை பார்த்த அரசி ஒளிந்து கொண்டார். இருந்தாலும் சுகன்யா, அரசி மற்றும் குமரவேலு ஒன்றாக இருப்பதை பார்த்து விட்டார். ஆனாலும் சுகன்யா இதற்கு சப்போட்டாகத்தான் மறுபடியும் பேசி அரசி மனசை குழப்பி பாண்டியன் வீட்டில் பிரச்சனையை உண்டாக்கப் போகிறார். அதற்கு ஏற்ற மாதிரி சுகன்யா நினைத்தபடி எந்த ஒரு விஷயமும் பாண்டியன் வீட்டில் நடக்கவில்லை. தற்போது பழனிவேலுவை கூட்டிட்டு சினிமாவுக்கு போன சுகன்யாக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டது. அதாவது படம் பார்க்க போகிறோம் என்று சொன்னதும் சுகன்யா ஆசையில் நல்ல தியேட்டர் நல்ல என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சு மனசுல கோட்டையை கட்டி இருக்கிறார்.

ஆனால் பழனிவேலு கூட்டிட்டு போனது அந்த ஊரில் இருக்கும் ஒரு கொட்டகை. அதை பார்த்ததும் சுகன்யா கத்த ஆரம்பித்து விட்டார். அத்துடன் சினிமாவிற்கு கூட்டிட்டு வர கையில் எவ்வளவு பணம் வச்சிருக்கீங்க என்று கேட்கிறார். உடனே பழனிவேல் 300 ரூபாய் இருக்கிறது என்று சொல்லியதும் சுகன்யா 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாச்சு மீதி இருக்கும் 200 ரூபாயில் 160 ரூபாய் டிக்கெட் இப்படி கணக்கு போட்டு என்னை கூட்டு வந்தீங்களா என்று பழனிவேல் இடம் சண்டை போடுகிறார்.
இதுக்கு உங்க அண்ணன் ஏடிஎம் கார்டு கொடுத்தார் தானே அதையே வாங்கிட்டு வந்திருக்கலாம்ல என கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார். ஆனாலும் பழனிவேல் மீது இந்த விஷயத்தில் தவறு இருக்க தான் செய்கிறது. கல்யாணம் முடிஞ்சு பொண்டாட்டியை கூட்டிட்டு வருகிறார் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி எல்லா விஷயத்தையும் பழனிவேல் தான் முறையாக செய்து இருக்கணும். ஆனால் பழனிவேலு, சுகன்யாவுக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார் என்ற அளவுக்கு சுகன்யா ரொம்ப பீல் பண்ணுகிறார்.

உடனே படமும் பார்க்க வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்லி வீட்டிற்கு திரும்ப கூட்டிட்டு போக சொல்கிறார். நேரடியாக முத்துவேல் மற்றும் சக்திவேல் வீட்டிற்கு போய் நடந்த விஷயத்தை சுகன்யா ஒப்பிக்கிறார். உடனே அவர்களும் இதுதான் சான்ஸ் என்று பாண்டியனை பற்றி தவறாக சொல்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் பாண்டியன் மீதும் தவறு இருக்கிறது. புதுசாக கல்யாணம் பண்ணிட்டு முதல் முதலாக வெளியே போறாங்கன்னா கஞ்சத்தனமாக 300 ரூபாய் மட்டும் கொடுத்தால் எப்படி கட்டுப்படியாகும். கொஞ்சம் கூட யோசனையே இல்லாமல் பாண்டியன் ஓவராகத்தான் பண்ணுகிறார். அதனால் பிள்ளைகள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கூட புரிந்து கொள்ள முடியவில்லை. அடுத்ததாக காதல் லீலைகளை செய்துவிட்டு வீட்டுக்கு வந்த அரசிடம் கோமதி சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறார். ஆனால் அரசி அம்மாவிடம் பொய் சொல்லும் அளவிற்கு பல பொய்களை சொல்லி ஏமாற்றி விடுகிறார். இருந்தாலும் கோமதிக்கு, அரசி மீது தற்போது சந்தேகம் வந்துவிட்டது.

Leave a comment

Type and hit enter