OOSAI RADIO

Post

Share this post

மூக்குத்தி அம்மன் 2-ல் இணைந்த பிரபலங்கள்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்குகிறார். நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் இதன் அறிவிப்பு ஏற்கனவே வந்தது. அதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் கோவிலில் படத்திற்காக பூஜை செய்தார். அதை அடுத்து ரஜினி, கமல், சுந்தர் சி உட்பட அனைவருக்கும் இதன் அழைப்பிதழை நேரில் கொடுத்தார். மேலும் இன்று படத்தின் பூஜை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று பிரசாத் ஸ்டுடியோவில் பூஜை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இதில் சுந்தர் சி மட்டுமல்லாது படத்தில் இணைந்திருக்கும் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
அதேபோல் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா, அபிநயா, துனியா விஜய், யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இன்னும் நாம் எதிர்பார்க்காத முக்கிய பிரபலங்களும் இணைவார்கள் என தெரிகிறது. அது மட்டும் இன்றி அரண்மனை போல் இப்படமும் திரில்லர் கலந்து இருக்கும் என்ற செய்திகளும் கசிந்துள்ளது. படத்தின் இறுதியில் சுந்தர் சி ஸ்டைலில் பிரம்மாண்ட பாடலும் இடம்பெறும். இப்படியாக தற்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து இருக்கிறது மூக்குத்தி அம்மன் 2. பூஜை முடிந்த பிறகு சுந்தர் சி என் கேரியரில் இது மிகப்பெரிய படம். இந்திய அளவில் மிகப்பெரிய படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter