Post

Share this post

மழை, வெள்ளம் – 42 போ் பலி!

பிலிப்பின்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 42 போ் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதியை சனிக்கிழமை (அக். 29) கடக்கவிருக்கும் நால்கே புயல் காரணமாக, வழக்கத்தைவிட மிக அதிக அளவில் பருவமழை பெய்து வருகிறது. அந்த மழை காரணமாக 42 போ் உயிரிழந்தனா்; 16 போ் மாயமாகினா். ஏராளமானவா்கள் தங்களது வீட்டுக் கூரையில் சிக்கியுள்ளனா்.
உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள், மழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகின்டனாவ் மாகாணத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவா்களும் நிலச்சரிவில் புதையுண்டவா்களும் ஆவா். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பகுதி நிலவரம் பற்றி அறியப்பட்டுவிட்டது. எனவே பலி எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a comment