Post

Share this post

மழையால் ஆட்டம் காணும் உலக்க கிண்ணம்!

டி20 உலகக் கிண்ண போட்டியில் மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த இரு ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.
அன்றைய நாளின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – அயா்லாந்து அணிகளும், 2 ஆவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளும் மோதவிருந்தன. ஆனால் விடாமல் பொழிந்த தொடா் மழையால் இரு ஆட்டங்களுமே அடுத்தடுத்து கைவிடப்பட்டன.
அதிலும் முக்கிய ஆட்டமாக இருந்த அவுஸ்திரேலியா – இங்கிலாந்து மோதலைக் காண மைதானத்தில் கூடிய ரசிகா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஆட்டங்கள் கைவிடப்பட்டதை அடுத்து 4 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிா்ந்தளிக்கப்பட்டது.
புள்ளிகள் பட்டியலின் தற்போதைய நிலையின் அடிப்படையில், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கடினமாகியிருக்கிறது. அடுத்து நடைபெற இருக்கும் இரு ஆட்டங்களிலும் அந்த அணிகள் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
மெல்போா்னில் மழை காரணமாக இத்துடன் 3 ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆட்டங்களுக்கு முன் கடந்த 26 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் – நியூஸிலாந்து மோத வேண்டிய ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. அதற்கு முன் 23 ஆம் திகதி இந்தியா – பாகிஸ்தான் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், அந்த ஆட்டம் மழையின்றி தப்பித்தது.

Recent Posts

Leave a comment