OOSAI RADIO

Post

Share this post

1000 எபிசோடு கிட்ட வந்தும் கடைசி இடத்தில் இருக்கும் சீரியல்

பொதுவாக சன் டிவி சீரியலுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைகளை கொடுத்தால் பிடிக்கும் என்பதற்கு ஏற்ற மாதிரி சன் டிவியில் உள்ள சீரியல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் கிட்டத்தட்ட 19 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் அடுத்தடுத்து புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் காலையில் மட்டுமே 11 சீரியல்கள் ஒளிபரப்பு செய்து குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது.

ஆனால் டிஆர்பி ரேட்டிங் பொறுத்தவரை சாயங்காலம் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான் அதிக புள்ளிகள் பெற்று டாப் இடத்தை தொட்டிருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சில சீரியல்கள் கம்மியான புள்ளிகளை பெற்று கடைசி வரிசையில் இருக்கிறது. அந்த சீரியல்கள் எதுவென்று தற்போது பார்க்கலாம்.
இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கிய செவ்வந்தி சீரியல் கிட்டத்தட்ட 800 எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பு செய்து எப்படியாவது 1000 எபிசோடை தொட வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் 1.51 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக 1.70 புள்ளிகளை பெற்று பூங்கொடி சீரியல் நான்காவது இடத்திலும், புனிதா என்கிற சீரியல் 2.01 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும், மணமகள் வா சீரியல் 2.50 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திலும் புன்னகை பூவே என்கிற சீரியல் 3.22 புள்ளிகளை பெற்று முதலிடத்திலும் இருக்கிறது.
அந்த வகையில் இந்த ஐந்து சீரியல்கள் தான் கடந்த சில மாதங்களாக கம்மியான புள்ளிகளை பெற்று கடைசி ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது.

Leave a comment

Type and hit enter