பிரபல இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் சென்னையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.
பிக் பாஸ் முதல் பருவத்தில் கலந்துகொண்டு புகழ் பெற்றவர் ஹரிஷ் கல்யாண். 2018-ல் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். நூறு கோடி வானவில், டீசல் ஆகிய படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை – திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நர்மதா உதய்குமாரைத் திருமணம் செய்துகொண்டார் ஹரிஷ் கல்யாண். இதையடுத்து திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.