Post

Share this post

உடல்நலம் பாதிப்பு – சமந்தா அதிர்ச்சித் தகவல்!

மயோசிடிஸ் என்கிற உடல்நல பாதிப்பு குறித்து நடிகை சமந்தா தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையான சமந்தா இன்ஸ்டகிராமில் கூறியதாவது:
யசோதா டிரெய்லருக்கு அனைவரும் அளித்த வரவேற்புக்கு நன்றி. இந்த அன்பு தான் வாழ்க்கையின் முடிவில்லா சவால்களை எதிர்கொள்ள வைக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) நான் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் நான் நினைத்ததை விடவும் குணமாக இன்னும் நாள் ஆகும் எனத் தெரிகிறது.
எப்போதும் தைரியமாக இருக்க வேண்டியதில்லை என்பதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறேன். நோயின் பாதிப்பை ஏற்றுக்கொள்ள இன்னும் கடினமாக உள்ளது.
நான் விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என மருத்துவர்கள் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல நாள்கள், மோசமான நாள்கள் என இரண்டையும் எதிர்கொண்டுள்ளேன். இந்த நாளை என்னால் எதிர்கொள்ள முடியாது எனத் தோன்றிய போது அதுவும் கடந்து சென்றிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு நாளில் குணமாகி விடும் தருணத்தை நெருங்கி விட்டேன் என்று தான் நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும் என்று கூறியுள்ளார். மேலும் சிகிச்சை பெற்றுக் கொண்டே டப்பிங் பணியில் ஈடுபடும் புகைப்படத்தையும் சமந்தா பகிர்ந்துள்ளார்.
சமந்தா விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

Recent Posts

Leave a comment