Post

Share this post

உலகக் கிண்ண செம்பியன்!

இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு செம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்க வைத்துக் கொண்டது.
இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 2 ஆவது முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் கொலம்பிய அணி விஷயத்தில் விதி விளையாடியது. அந்த அணியின் அனா மரியா குஸ்மான் 82 ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, அது ஸ்பெயினுக்கு சாதகமாகிப் போனது. எஞ்சிய நேரத்தில் கொலம்பியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஸ்பெயின் வாகை சூடியது.
நைஜீரியா 3 ஆம் இடம் : இப்போட்டியில், 3 ஆவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் ஜொ்மனியை வீழ்த்தியது. முன்னதாக இரு அணிகளும் மோதிய ஆட்டம் 3 – 3 என்ற கோல் கணக்கில் டிரா ஆக, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில், நைஜீரியா 3 – 2 என்ற கோல் கணக்கில் வென்றது.

Recent Posts

Leave a comment