Post

Share this post

சமந்தாவை காதலித்திருக்கிறேன் – மனம் திறந்த நடிகன்!

ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிக்கும் திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்துள்ளதாக படக்குழுவினர் பாராட்டியுள்ளனர். அக்.27 ஆம் திகதி வெளியான டிரெயிலரை 10 மில்லியன் மக்களுக்கும் மேலாக யூடியூபில் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இணைந்து நடித்து வருகிறார்.
யசோதா படத்தின் டிரெயிலரை பகிர்ந்த விஜய் தேவர கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்லூரி நாட்களில் திரையில் முதன்முதலாக பார்த்த போதே அவரை காதலித்தேன். இன்று அவர் இருக்கும் நிலைமைக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு தலைவணங்குகிறேன்” என கூறியுள்ளார்.

Recent Posts

Leave a comment