OOSAI RADIO

Post

Share this post

எடிட்டரை சமரசம் செய்த நடிகை

அக்கட தேசத்தில் இருந்த வந்த நடிகை சினிமாவுக்கு வந்த புதிதிலேயே கொடிகட்டி பறக்க ஆரம்பித்துவிட்டார். அவரது படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆக எட்ட முடியாத உயரத்தில் இருந்து வருகிறார். ஆனால் திடீரென அவருக்கு ஒரு சோதனை வந்திருக்கிறது. ஆரம்பத்தில் பட வாய்ப்பு இல்லாதபோது ஒரு இயக்குனர் முதலில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அந்த படத்தில் அந்தரங்க காட்சியிலும் நடிகை நடித்திருக்கிறார். வேறு வழியில்லாமல் அப்போது வாய்ப்பு வேண்டுமே என்று நடித்து விட்டார்.

ஆனால் தயாரிப்பாளருக்கு பண நெருக்கடியால் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் போய்விட்டது. இப்போது ஒரு வழியாக பண பிரச்சனை தீர்ந்தவுடன் மீண்டும் அந்த படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
இந்த விஷயம் நடிகைக்கு தெரிய வந்தவுடன் அந்த படம் வெளியானால் நம்முடைய பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகிவிடும் என பயந்துள்ளார். இதுகுறித்து இயக்குனருடன் பேசினால் வேலைக்கு ஆகாது என்பது நன்றாக தெரிந்துள்ளது. ஆகையால் நேரடியாக எடிட்டருடன் சமரசம் பேசி அந்த காட்சியை நீக்க சொல்லியிருக்கிறார் நடிகை. இயக்குனருக்கே தெரியாமல் எடிட்டரும் நடிகையின் பேச்சைக் கேட்டு அந்த காட்சியை நீக்கி விட்டாராம். இப்போது தான் நடிகை நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.
ஒருவேளை அந்த காட்சி மட்டும் இப்போது வெளியாகி இருந்தால் நடிகையின் மொத்த பேரும் டேமேஜ் ஆகி இருக்கும். ஏதோ சாதூரியமாக இப்போது அந்த காட்சியை நீக்கியதால் ஓரளவு நடிகையின் மானம் போகாமல் இருக்கும்.

Leave a comment

Type and hit enter