OOSAI RADIO

Post

Share this post

அதிக தொகைக்கு வியாபாரம் ஆன 4 படங்கள்

சமீப காலமாக வெளியாகும் பாதி படங்கள் OTT வியாபாரத்திலேயே போட்ட பணத்தை எடுத்து விடுகிறது. OTT தளங்களை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களும் வந்து விட்டார்கள்.அப்படி இந்த வருடத்தில் அதிக தொகையில் வியாபாரம் ஆகி இருக்கும் நான்கு படங்களை பற்றி பார்க்கலாம்.

தக் லைஃப்: இந்தியன் 2 படத்தின் நெகட்டிவ் விமர்சனத்திற்கு பிறகும் கமலுக்கு மவுசு குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.30 வருடங்கள் கழித்து கமல் மற்றும் மணிரத்தினம் இணைவதால் தக் லைவ் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறி விட்டது.இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 147 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இந்த வருடத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படம் இதுதான்.

கூலி: லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் கூலி பட ரிலீஸ் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது.இந்த நிலையில் தான் இந்த படத்தை அமேசான் நிறுவனம் 120 கோடி தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.ரஜினியின் கேரியரில் ஜெயிலர் படம் 100 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில் இது 20 கோடி அதிகமான வியாபாரத்தை செய்திருக்கிறது.

குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் குட் பேட் அக்லி படம் ஏற்கனவே டிரைலரில் அதகளம் செய்துவிட்டது. வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் 95 கோடிக்கு வாங்கி இருக்கிறது.ரெட்ரோ: சூர்யா ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படம் தான் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் எப்படியும் சூர்யாவை கரையேற்றி விடுவார் என்பது அவருடைய ரசிகர்களின் நம்பிக்கை.இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 85 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Type and hit enter