Post

Share this post

செல்வாக்குமிக்க முஸ்லிம்கள் பட்டியலில் ஹுரியத் தலைவா்!

சா்வதேச அளவில் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களில் பட்டியலில் ஜம்மு – காஷ்மீா் பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் பெயா் இடம் பெற்றுள்ளது.
ஜோா்டான் நாட்டைச் சோ்ந்த ‘ராயல் இஸ்லாமிக் ஸ்ட்ரடீஜிக் ஸ்டடீஸ் சென்டா்’ மற்றும் ஜாா்ஜ்டவுன் பல்கலைக்கழகம் இணைந்து இந்தப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில் சா்வதேச அளவில் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள் பட்டியலில் தங்கள் அமைப்பின் தலைவா் பெயா் இடம் பெற்றுள்ளது என்று ஹுரியத் அமைப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீா் மக்களுக்காக இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்தியதன் மூலம் அப்பிராந்திய மக்களின் மனதை மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் வென்றுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா மன்னா் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், துருக்கி ஜனாதிபதி எா்டோகன், ஈரான் மதத் தலைவா் அயதுல்லா கமேனி, ஜோா்டான் மன்னா் அப்துல்லா உள்ளிட்டோா் பெயா்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

Leave a comment