பேட்டிங் வரிசையில் ஒரு நல்ல 4 ஆம் நிலை வீரர் கிடைக்க மாட்டாரா என இந்திய அணி நீண்ட நாளாக ஏங்கி வந்தது. அதற்கான தீர்வாக உள்ளார் 32 வயது சூர்யகுமார் யாதவ்.
கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் சூர்யகுமார் யாதவ். இதுவரை 13 ஒருநாள், 37 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் எப்போது களமிறங்கினாலும் அதிரடியாக விளையாடி ரசிகர்களை ஈர்த்துள்ளார். அவருடைய ஸ்டிரேக் ரேட் 177.02 ஆக இருப்பது அனைவரையும் மலைக்க வைக்கிறது. டி20 கிரிக்கெட்டில் 1 சதமும் 11 அரை சதங்களும் எடுத்துள்ளார். அதிலும் இந்த வருடம் சூர்யகுமாரின் வேகத்துக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை.
இந்த வருடம் 4 ஆம் நிலை வீரராக 8 அரை சதங்கள் எடுத்துள்ளார். இப்படி 4 ஆம் நிலையில் அல்லது அதற்குக் கீழே களமிறங்கி ஒரு வருடத்தில் வேறு எந்த இந்திய வீரரும் இத்தனை அரை சதங்கள் எடுத்ததில்லை.
சர்வதேச டி20 : 4 ஆம் நிலையில் அல்லது அதற்குக் கீழே களமிறங்கி ஒரு வருடத்தில் அதிக அரை சதங்கள் எடுத்த இந்திய வீரர்கள்:
8 – சூர்யகுமார் யாதவ், 2022
3 – யுவ்ராஜ் சிங், 2009
2 – யுவ்ராஜ் சிங், 2007
2 – பாண்டியா, 2022
மேலும் 2022 இல் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். 26 ஆட்டங்களில் 8 அரை சதங்கள், 1 சதத்துடன் 935 ஓட்டங்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் – 183.69. 55 சிக்ஸர்கள், 83 பவுண்டரிகள். இந்த வருடம் வேறு எந்த வீரரும் இத்தனை பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிக்கவில்லை. மேலும் இந்த வருடம் குறைந்தது 450 ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் சூர்யகுமாரைத் தவிர வேறு யாரும் ஸ்டிரைக் ரேட்டில் 180 க்கு அருகில் வரவில்லை.
சர்வதேச டி20 : 4 ஆம் நிலையில் அல்லது அதற்குக் கீழே களமிறங்கி அதிக அரை சதங்கள் எடுத்த இந்திய வீரர்கள்:
9 – சூர்யகுமார் யாதவ்
8 – யுவ்ராஜ் சிங்
3 – ஷ்ரேயஸ் ஐயர்