Post

Share this post

காதலரை அறிவித்த நடிகை!

நடிகை மஞ்சிமா மோகன் தனது நீண்ட நாள் காதலை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடைமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா. கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதலித்ததாக அப்போதே தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் இருவருமே தங்களது காதலை புகைப்படம் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்து கூறியதாவது:
மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போன போது நீ ஒரு காவல் தேவதை போல என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்! ஒவ்வொரு முறையும் நான் குழப்பத்தில் சிக்கியிருக்கையில், நீ என்னை மேலே இழுக்கிறாய். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய்.
நான் உன்னிடம் நேசிக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், நான் நானாக இருப்பதையே விரும்பியவன் நீ.

Recent Posts

Leave a comment