கிரிக்கெட் விளையாடும் நடிகை!

தனது அடுத்த படத்தின் புரமோஷனுக்காக கிரிக்கெட் விளையாடிய கத்ரீனாவின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘அந்தாதுன்’ பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் ‘மெரி கிரிஸ்துமஸ்’. ‘அந்தாதுன்’ படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ஹிந்தி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இஷான், சதுர்வேதி ஆகியோருடன் கத்ரீனா நடித்த ‘போன் பூத்’ எனும் ஹிந்தி படத்தின் புரமோஷனுக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார். குர்மீத் சிங் இயக்கிய இந்தப் படம் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கான நேற்றைய (அக்.30) போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலுவலகத்தில் முன்னாள் வீரர் ஹர்பஜன் பந்து வீச க்யூட்டாக கிரிக்கெட் ஆடினார் கத்ரீனா. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.