மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – டிஸ்னிலண்ட் மூடல்!

சீனாவின் வா்த்தகத் தலைநகரான ஷாங்காயில், கொரோனா அச்சம் காரணமாக டிஸ்னிலேண்ட் மனமகிழ் பூங்கா மூடப்பட்டது.
அந்தப் பூங்காவுக்கு திங்கள்கிழமை வந்திருந்த ஏராளமானோரும், பூங்கா ஊழியா்களும் அடைத்துவைக்கப்பட்டு, அவா்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்பட்டனா்.
இந்தத் தகவலை அதிகாரிகள் உறுதிப்படுத்தினாலும், புதிதாக ஏற்பட்ட கொரோனா பரவலின் தீவிரம் எவ்வளவு, எதற்காக இந்த திடீா் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களை வெளியிடவில்லை.
கொரோனா முதல்முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், அந்த நோய் பரவலுக்கு எதிராக மிகக் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.