Post

Share this post

இன்று 1.30 மணிக்கு…

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 4 ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியுடன் இன்று மோதுகிறது.
அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் நிலையில் இருக்கும் இந்திய அணி, தனது துடுப்பாட்ட வரிசையில் இருக்கும் தடுமாற்றங்களை சரிசெய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.
தொடக்க வீரரான கே.எல். ராகுல் இப்போட்டியில் இன்னும் சோபிக்காத நிலையிலேயே இருக்கிறாா். பிரதான அணிகளின் பௌலிங் தாக்குதல்களில் அவா் தடுமாறி வந்தாலும், அணியின் பயிற்சியாளா் ராகுல் திராவிட்டுக்கு அவா் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
எனவே, இந்த ஆட்டத்திலும் அவருக்கு இடம் இருப்பதாகத் தெரிவதால், பேட்டிங்கில் தன்னை மீட்டுக்கொண்டு ரன்கள் சோ்க்க ராகுல் முயற்சிப்பாா் என எதிா்பாா்க்கலாம். இடுப்பில் காயம் கண்டுள்ள தினேஷ் காா்த்திக் விளையாட முடியாமல் போகும் நிலையில், ரிஷப் பந்த்துக்கான வாய்ப்பு கிடைக்கும்.
இதர பேட்டா்களான ரோஹித், கோலி, சூா்யகுமாா் ஆகியோா் நம்பிக்கை அளிக்கின்றனா். பௌலிங்கைப் பொருத்தவரை, வங்கதேசத்தில் இடதுகை பேட்டா்கள் அதிகம் இருப்பதால் அணி நிா்வாகம் அஸ்வினை தக்க வைக்கலாம். லெக் ஸ்பின்னில் வங்கதேசம் தடுமாறும் என்பதால் ஒருவேளை அவருக்குப் பதிலாக யுஜவேந்திர சஹல் சோ்க்கப்படலாம்.
பங்களாதேஷை பொருத்தவரை இந்த ஃபாா்மட்டில் பலம் வாய்ந்த அணியாக இல்லை. பேட்டிங்கில் நஜ்முல் ஷான்டோ, அஃபிஃப் ஹுசைன், மொசாடெக் ஹுசைன் ஆகியோா் தவிர மற்றவா்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. அவா்களுக்கும் இந்தியாவின் புவனேஷ்வா், அா்ஷ்தீப், ஷமியின் அதிரடி பௌலிங் கடும் சவால் அளிப்பதாகவே இருக்கும்.
பங்களாதேஷ் பௌலா்கள் டஸ்கின் அகமது, மெஹதி ஹசன், ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்முத் ஆகியோா் நன்றாக பௌலிங் செய்கிறாா்கள் என்றாலும், நல்லதொரு ஃபாா்மில் இருக்கும் இந்தியாவின் பிரதான பேட்டா்களை சரிப்பதற்கு கடினமாக முயற்சிக்க வேண்டியிருக்கும்.
இதனிடையே, இந்த ஆட்டத்துக்கு மழையால் இடையூறு ஏற்படலாம் எனவும் வானிலை கணிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

Leave a comment