Post

Share this post

இந்த பழக்கம் இருக்கா – உடனே நிறுத்துங்கள் – ஆபத்து!

நம்மில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை சிலருக்கு மூக்கை நோண்டுவது பழக்கமாக இருக்கலாம். பதற்றப்படும்போது அல்லது சலிப்புத் தட்டும்போது அதைச் செய்யும் அவர்களின் வழக்கம் .
ஆனால் அவ்வாறு செய்வது ஆபத்தை வெளிவிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவ்வாறு செய்வது முதுமை மறதி நோய், (Dementia) அல்சைமர்ஸ் நோய் (Alzheimer’s disease) ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு அவ்வாறு சொல்கிறது. அதன் முடிவுகள் ‘Scientific Reports’ ஆய்விதழில் வெளியிடப்பட்டது. வாசனையைத் தெரியப்படுத்தும் மூக்கிலுள்ள நரம்பின் வழியே கிருமிகள் மூளைக்குப் பரவலாம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
ஆய்வு எலிகளின் மீது நடத்தப்பட்டது. அது மனிதர்களுக்கும் அதே விளைவை ஏற்படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆய்வை மனிதர்கள் மீது நடத்தி, முடிவுகளைத் தீர்மானிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மூக்கை நோண்டக்கூடாது என்பதுடன் அதிலிருந்து முடிகளைப் பிடுங்கக்கூடாது என்று அவர்கள் எச்சரித்தனர்.
அத்துடன் மூக்கின் உள்ளே இருக்கும் மெல்லிய திரை சேதமடையும்போது, அதன் மூலம் மூளைக்கு அதிகமான கிருமிகள் செல்லும் அபாயம் அதிகரிப்பதாகக் அந்த ஆய்வு கூறுகின்றது.

Recent Posts

Leave a comment