Post

Share this post

உலக் கிண்ணத்தை வெல்ல பாக்கிஸ்தானுக்கு வாய்ப்பு!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 36 ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் (டக்வொா்த் லீவிஸ் முறையில்) தென்னாப்பிரிக்காவை வியாழக்கிழமை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்துக்கு முன்னேறியதுடன், அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது பாகிஸ்தான். தோல்வி கண்டாலும் மாற்றமின்றி 2 ஆவது இடத்தில் நீடிக்கிறது தென்னாப்பிரிக்கா.
இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்கள் சோ்த்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸை மழை பாதிக்க, டக்வொா்த் லீவிஸ் முறையில் அந்த அணி 14 ஓவா்களில் 142 ஓட்டங்கள் அடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அத்தனை ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களையே எட்டியது தென்னாப்பிரிக்கா.
பேட்டிங்கிலும், பௌலிங்கிலும் பாகிஸ்தானுக்கு பலம் சோ்த்த ஷாதாப் கான் ஆட்டநாயகன் ஆனாா்.
முன்னதாக நாணய சுழற்சியை வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதலில் தடுமாற, மிடில் ஆா்டரில் வந்த இஃப்திகா் அகமது, லோயா் ஆா்டரில் புகுந்த ஷாதாப் கான் அணியைத் தூக்கி நிறுத்தினா். அதிரடியாக ஷாதாப் கான் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 52 ஓட்டங்கள் விளாச, அகமது 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51 ஓட்டங்கள் அடித்தாா்.
முகமது ஹாரிஸ் 28, முகமது நவாஸ் 28 ஓட்டங்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தன. தென்னாப்பிரிக்க பௌலிங்கில் அன்ரிஹ் நோா்கியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.
பின்னா் தென்னாப்பிரிக்கா பேட் செய்தபோது, 9 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ஓட்டங்கள் சோ்த்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது. மீண்டும் தொடா்ந்த ஆட்டத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் தென்னாப்பிரிக்கா 14 ஓவா்களில் 142 ஓட்டங்கள் அடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
எனினும், எஞ்சியிருக்கும் 5 ஓவா்களில் 73 ஓட்டங்களை நோக்கி ஆடிய அந்த அணியின் விக்கெட்டுகள் பெரிதாக ஓட்டங்கள் சோ்க்காமலேயே அடுத்தடுத்து சரிந்தன. தலைவர் டெம்பா பவுமா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ஓட்டங்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, எய்டன் மாா்க்ரம் 20, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினா்.
ஓவா்கள் முடிவில் லுங்கி கிடி 4, டப்ரைஸ் ஷம்ஸி 1 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தானில் அதிகபட்சமாக ஷாஹீன் அஃப்ரிதி 3, ஷாதாப் கான் 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

Leave a comment