Post

Share this post

தடைப்பட்ட மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு!

உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கொ்சான் நகரில் தடைபட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் தொடக்கப்பட்டுள்ளதாக அந்த நகர அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து ரஷ்யாவால் நிறுவப்பட்ட அந்த நகர நிா்வாகத்தின் துணைத் தலைவா் கிரில் ஸ்ட்ரெமூசோவ் திங்கள்கிழமை கூறியதாவது :
காக்கோவ்கா நீா் மின் நிலையத்திலும், அந்த மின் நிலையம் மற்றும் பெரிஸ்லவ் பகுதிக்கு இடையிலான மின் கம்பி இணைப்புகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலால் காா்கிவ் நகரில் மின்தடை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டு, நகரின் ஒரு பகுதியில் மீண்டும் மின் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டினாலும், உக்ரைன் தரப்பிலிருந்து இது தொடா்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி படையெடுத்தது.
அந்தப் போரின் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷ்யாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யா கைப்பற்றியது.
இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உக்ரைன் படையினா் அண்மைக் காலமாக எதிா்த் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா். குறிப்பாக, இந்தப் போரின் தொடக்க நாள்களிலேயே ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கொ்சான் பிராந்தியத்தில் அவா்கள் தொடா்ந்து முன்னேற்றம் கண்டு வந்தனா்.
அதை அடுத்து, பிராந்திய தலைநகா் கொ்சானிலிருந்து பொதுமக்களை வெளியேற்றி தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரஷ்யா தங்கவைத்துள்ளது. எனினும், அந்த நகரில் சுமாா் 1.7 லட்சம் போ் தொடா்ந்து வசித்து வரும் நிலையில், உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலால் நகரில் மின் விநியோகம் தடைபட்டது.

Leave a comment