Post

Share this post

திரைப்பிரபலங்கள் வெளியிட்ட ஆதாரம்! (வீடியோ)

அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கு திரைப்படம் ‘ஆதாரம்’. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா நடித்திருக்கிறார். மேலும், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார் மற்றும் ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘ஆதாரம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பி.எஸ்.மித்ரன், ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா மற்றும் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Recent Posts

Leave a comment